பழம்பெரும் நகைச்சுவை நடிகர் காலமானார்!
தமிழகத்தின் முதல் பலகுரல் மன்னன் என்கிற பெயரையும் பெற்றார்...
ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது, ஸ்பரிசம், வளர்த்தகடா, மண் சோறு, கோயில் யானை உள்ளிட்ட பல படங்களில் நடித்த பழம்பெரும் நகைச்சுவை நடிகர் ராக்கெட் ராமநாதன் காலமானார்.
மிமிக்ரி கலைஞராகப் புகழ்பெற்ற ராக்கெட் ராமநாதன், பிறகு திரைத்துறையிலும் நுழைந்தார். மேடைகளில் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பங்குபெற்று அதிகக் கவனம் பெற்றார். தமிழகத்தின் முதல் பலகுரல் மன்னன் என்கிற பெயரையும் பெற்றார். தமிழக அரசின் கலைமாமணி, நடிகர் சங்கத்தின் கலைச்செல்வம் விருதுகள் பெற்றவர்.
74 வயதான ராக்கெட் ராமநாதன், சமீபகாலமாக உடல்நலக்குறைவுடன் இருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவருக்கு பானுமதி என்கிற மனைவியும் சாய்பாலா என்கிற மகளும் சாய் குருபாலாஜி என்கிற மகனும் உள்ளார்கள்.
Advertisement