செய்திகள்

பிரபல வங்காள நடிகை மர்ம மரணம்: தற்கொலை என காவல்துறை சந்தேகம்!

தெற்கு கொல்கத்தாவைச் சேர்ந்த பாயல், பல்வேறு வங்காள மொழித் தொலைக்காட்சித் தொடர்களிலும் வெப் சீரியல்களிலும் நடித்தவர்...

எழில்

பிரபல தொலைக்காட்சி நடிகை பாயல் சக்ரபோர்தி, விடுதி அறையில் பிணமாகக் கிடந்துள்ளார். இதையடுத்து அவருடைய மரணம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தெற்கு கொல்கத்தாவைச் சேர்ந்த பாயல், பல்வேறு வங்காள மொழித் தொலைக்காட்சித் தொடர்களிலும் வெப் சீரியல்களிலும் நடித்தவர். இந்நிலையில் வடக்கு பெங்காலில் உள்ள சிலிகுரியில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார் பாயல்.

புதனன்று, நீண்டநேரமாக அவருடைய அறையைத் திறக்காததால், சந்தேகம் ஏற்பட்டு கதவை உடைத்து உள்ளே சென்றார்கள் விடுதி ஊழியர்கள். அறையினுள் அவர் தூக்கில் தொங்கியபடி பிணமாகக் கிடந்துள்ளார். தூக்கில் தொங்கியதால் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என அறியப்படுகிறது. எனினும் அவருடைய மரணத்துக்கான காரணங்களைக் காவல்துறை தீவிரமாக விசாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாயல் தன்னிடம் ராஞ்சிக்குச் செல்வதாகத்தான் சொன்னாள். அவளுக்கு சிலிகுரியில் என்ன வேலை எனத் தெரியவில்லை என்று கூறியுள்ளார் பாயலின் தந்தை பிரபிர் குஹா. 

38 வயது பாயல், சமீபத்தில் தனது கணவருடன் சட்டபூர்வமாகப் பிரிந்தார். அவருக்கு 2 வயது மகன் உண்டு. விவாகரத்து தொடர்பாக மன உளைச்சல் ஏற்பட்டதால் இந்த முடிவை அவர் எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துடரும் கூட்டணி! புதிய படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் மோகன் லால்!

முதல் டி20: ஆடம் ஸாம்பா அபார பந்துவீச்சு; ஆஸி.க்கு 169 ரன்கள் இலக்கு!

ஆன்லைனில் இந்த தயாரிப்புகளை வாங்க வேண்டாம்!

மத்திய பட்ஜெட்! அதிக முறை தாக்கல் செய்தவரும் மிகச் சிறிய பட்ஜெட்டும்!

முன்னாள் பிரதமரை நேரில் சந்தித்த மோடி!

SCROLL FOR NEXT