முகப்பு
செய்திகள்

விஷால் நடிக்கும் சண்டக்கோழி 2 டிரெய்லர் வெளியீடு!

2005-ல், லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்து வெளியான படம் சண்டக்கோழி. வசூல் ரீதியாக வெற்றியைப் பெற்றதோடு...

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:56 PM
பகிர்:

2005-ல், லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்து வெளியான படம் சண்டக்கோழி. வசூல் ரீதியாக வெற்றியைப் பெற்றதோடு விஷாலுக்கு ஆக்‌ஷன் அவதாரத்தையும் அளித்தது. அதன்பிறகு அவர் ஆக்‌ஷன் நாயகனாக அடையாளம் காண்பதற்கு அந்தப் படமே முக்கியக் காரணம்.

லிங்குசாமி - விஷால் - ராஜ்கிரண் கூட்டணியில் உருவாகும் சண்டக்கோழி 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தொடங்கியது. கீர்த்தி சுரேஷ், மீரா ஜாஸ்மின், வரலட்சுமி சரத்குமார் போன்றோரும் நடித்துள்ளார்கள். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments