முகப்பு
செய்திகள்

சாய்னா நெவால் படம்: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

பிரபல பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவாலின் வாழ்க்கை திரைப்படமாகவுள்ளது...

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:56 PM
பகிர்:

பிரபல பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவாலின் வாழ்க்கை திரைப்படமாகவுள்ளது. இதன் ஃபர்ட்ஸ் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

பாலிவுட் நடிகை ஷ்ரதா கபூர் நடிப்பில் அமோல் குப்தே இயக்கும் இப்படத்தை பூஷன் குமார் தயாரிக்கிறார். கடந்த வாரம் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

பிரபல வீராங்கனையான 28 வயது சாய்னா நெவால் 20-க்கும் அதிகமான சர்வதேசப் போட்டிகளை வென்றுள்ளார். அதில் 10 சூப்பர் சீரிஸ் போட்டிகள். ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கமும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார். இவர்,  பாட்மிண்டன் வீரரான காஷ்யப்பை விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருவருக்கும் டிசம்பர் 16 அன்று திருமணம் நடைபெறவுள்ளதாக அறியப்படுகிறது. 

நடிகர் சக்தி கபூரின் மகளான 31 வயது ஷ்ரதா கபூர், 2010 முதல் ஹிந்திப் படங்களில் நடித்து வருகிறார். இயக்குநர் அமோல் குப்தே 3 படங்களை இயக்கியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →