முகப்பு
செய்திகள்

பிக் பாஸ் 2 வெற்றியாளர் - நடிகை ரித்விகா! ரூ. 50 லட்சம் வென்றார்!

பிக் பாஸ் 2 போட்டியை நடிகை ரித்விகா வென்றுள்ளார். மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் 

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:56 PM
பகிர்:

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 100 நாள்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் 2 நிகழ்ச்சி இன்றுடன் நிறைவுபெற்றது.

ரித்விகா, ஜனனி, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி ஆகிய நான்கு நடிகைகளும் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றார்கள்.

இன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பிக் பாஸ் 2 வெற்றியாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

பிக் பாஸ் 2 போட்டியை நடிகை ரித்விகா வென்றுள்ளார். மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் ரித்விகா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்குக் கோப்பையும் ரூ. 50 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டுள்ளன.

இரண்டாம் இடத்தை நடிகை ஐஸ்வர்யா தத்தாவும் மூன்றாம் இடத்தை நடிகை விஜயலட்சுமியும் பெற்றுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments