செய்திகள்

பாலிவுட்டில் அர்ஜுன் ரெட்டி! வைரலாகும் 'கபீர் சிங்' டீஸர்!

சூப்பர் ஹிட் படமான அர்ஜுன் ரெட்டியின் ஹிந்தி ரீமேக்தான் ‘கபீர் சிங்’. தெலுங்கில் இப்படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்காவே ஹிந்தியிலும் இயக்குகிறார்.

உமா ஷக்தி.

சூப்பர் ஹிட் படமான அர்ஜுன் ரெட்டியின் ஹிந்தி ரீமேக்தான் ‘கபீர் சிங்’. தெலுங்கில் இப்படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்காவே ஹிந்தியிலும் இயக்குகிறார். ஷாகித் கபூர், கியாரா அத்வானி நடித்துள்ள இந்தப் படத்தின் டீஸர் அண்மையில் வெளியானது. வெளியான சில நிமிடங்களிலேயே அதிகம் ட்ரெண்டாகத் தொடங்கிவிட்டது.

ஹிந்தி ரசிகர்களுக்காக ஒரு சில மாற்றங்கள் செய்ததைத் தவிர்த்து, அர்ஜுன் ரெட்டியைப் போன்றே அட்டகாசமான டீஸராக இதனைப் பார்க்கலாம். இந்த டீஸரின் ஆரம்பத்தில் வாய்ஸ் ஓவரில் ஷாகித் கபூரின் கதாபாத்திரம் அறிமுகம் செய்து வைக்கப்படுகிறது. தொடர்ந்து போதையில் அவனது தினப்பொழுதுகளை, போராட்டத்தை பதிவு செய்கிறது. ஒரு நிமிடம் ஓடக் கூடிய இந்த டீஸர் காட்சிகள் படத்தின் தன்மையை மிகக் கச்சிதமாக காட்சிப்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான சிறப்பான டீஸர்களில் இதுவும் ஒன்று என்று கூறலாம். காரணம் படத்தின் இறுக்கத்தை ஒருசில காட்சிகளில் சிறப்பாக விளக்கியுள்ளது.

அர்ஜுன் ரெட்டி குறித்து ஷாகித் கபூர் கூறுகையில், ‘இந்தப் படம் நேர்மையாகவும் ஆழமாகவும் இருந்தது. அதில் எதுவும் வலிந்து திணிக்கப்படவில்லை. தீவிரமாக உணர்ச்சிவசப்படக்கூடிய ஒரு கதாபாத்திரத்தின் நெடிய பயணம்தான்’ என்றார்.

பூஷன் குமார், முரத் கெதானி, கிருஷ்ண குமார் மற்றும் அஷ்வின் வார்தே ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். கபீர் சிங் ஜூன் 21-ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT