செய்திகள்

காதலியுடனான திருமண நிச்சயதார்த்தத்தை அறிவித்த மஹத்: யாஷிகா வாழ்த்து!

மிஸ் இந்தியா எர்த் 2002 பிரச்சி மிஸ்ராவைக் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தார் மஹத்

எழில்

அஜித் நடித்த மங்காத்தா படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமான மஹத், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அதிகக் கவனம் பெற்றார்.

மிஸ் இந்தியா எர்த் 2002 பிரச்சி மிஸ்ராவைக் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தார் மஹத். இந்நிலையில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாக அறிவித்துள்ளார் மஹத்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, மஹத்தைத் தான் காதலிப்பதாக நடிகை யாஷிகா தெரிவித்தார். யாஷிகாவைத் தானும் காதலிப்பதாக மஹத் கூறினார். இதையடுத்து மஹத்தைத் தான் பிரிந்துவிட்டதாக பிரச்சி மிஸ்ரா இன்ஸ்டகிராமில் தெரிவித்தார். பிறகு அந்தப் பதிவை அவர் நீக்கிவிட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து மஹத் வெளியே வந்தபிறகு இருவருடைய மனக்கசப்பும் நீங்கி மீண்டும் காதலர்கள் ஆனார்கள். இந்நிலையில் தற்போது இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

இன்ஸ்டகிராமில் இந்தத் தகவலை மஹத் தெரிவித்ததற்கு யாஷிகா அளித்த பதிலில், உங்கள் இருவருக்காக மகிழ்கிறேன். வாழ்த்துகள் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

ரிலாக்ஸ்... ரேஷ்மா பசுபுலேட்டி!

விஜே பார்வதிக்கு சரியான போட்டியாளர் திவ்யா கணேசன்! ரசிகர்கள் கருத்து

தெலங்கானா அமைச்சரவையில் அசாருதீனுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு!

கோவிலுமல்ல, சிற்பமுமல்ல... ஆனியா!

SCROLL FOR NEXT