ஹிந்தியில் உருவாகும் காஞ்சனா: அக்ஷய் குமாரை இயக்குகிறார் ராகவா லாரன்ஸ்!
சத்தமில்லாமல் தனது ஹிந்திப் படத்தைத் தொடங்கியுள்ளார் இயக்குநரும் நடிகருமான ராகவா லாரன்ஸ்...
காஞ்சனா 3 படம் வசூலில் சாதனை நிகழ்த்திக்கொண்டிருக்கும்போது சத்தமில்லாமல் தனது ஹிந்திப் படத்தைத் தொடங்கியுள்ளார் இயக்குநரும் நடிகருமான ராகவா லாரன்ஸ்.
காஞ்சனா படத்தை லக்ஷ்மி பாம் என்கிற பெயரில் இயக்கி வருகிறார். அக்ஷய் குமார் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. கதாநாயகியாக கியாரா அத்வானி நடிக்கவுள்ளார்.