செய்திகள்

சமூகவலைத்தளங்களில் தமிழ்ப் படங்களுக்கு விளம்பரம் செய்ய வேண்டுமா?: ஹர்பஜன் சிங் புதிய அறிவிப்பு!

எழில்

சமூகவலைத்தளங்களில் தமிழ்ப் படங்களுக்கு விளம்பரம் செய்வது குறித்த புதிய அறிவிப்பை கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் வெளியிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரரும் சிஎஸ்கே அணி வீரருமான ஹர்பஜன் சிங், தன்னுடைய ட்விட்டர் கணக்கில் அடிக்கடி தமிழில் ட்வீட்களை வெளியிடுவார். அவருடைய தீவிர ரசிகரான சரவணன் பாண்டியன் இதற்கு உதவி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஹர்பஜன் ட்வீட் செய்ததாவது:

என் மூலமாக தமிழ் சினிமா  விளம்பரங்கள், ஒப்பந்தங்கள், வியாபாரம், சமூக வலைதள விளம்பரங்கள் செய்ய விரும்பினால் தொடர்புக்கு அணுகவும் - என் அன்பு தம்பி சின்னாளப்பட்டி சரவணன் பாண்டியன் என்று எழுதியுள்ளார். இதையடுத்து ஹர்பஜன் சிங்கின் ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பொதுவான ட்வீட்கள் மட்டுமல்லாமல் தமிழ்ப்பட விளம்பரங்களும் இடம்பெறும் எனத் தெரிகிறது. ட்விட்டரில் ஹர்பஜனை 1 கோடி பேருக்கும் அதிகமானோர் பின்தொடர்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT