செய்திகள்

ஆண்டிரியாவுக்கு அப்படி என்ன ஆச்சு? இன்ஸ்டாகிராமில் அவரே தந்த விளக்கம்!

'வணக்கம் சமூக ஊடகங்கள் மற்றும் பொது வாழ்க்கையிலிருந்து எனக்கு மிகவும் தேவைப்பட்ட இடைவெளிக்குப் பிறகு நான் திரும்பி வந்துள்ளேன்!

சினேகா

'மாளிகை’ என்ற பட அறிவிப்பைத் அடுத்து ஆண்ட்ரியா நடிக்கும் படங்கள் பற்றிய அறிவிப்புகள் எதுவும் வராத நிலையில், அவரது ரசிகர்கள் ஆண்டிரியாவுக்கு என்ன ஆனது என்று ஆர்வமாக காத்திருந்தனர்.

இந்நிலையில், நடிப்புக்கு சிறிய இடைவேளை கொடுத்திருந்த ஆண்டிரியா, திடீரென்று ப்ரேக் எடுத்ததன் காரணத்தை விளக்கமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

'வணக்கம் சமூக ஊடகங்கள் மற்றும் பொது வாழ்க்கையிலிருந்து எனக்கு மிகவும் தேவைப்பட்ட இடைவெளிக்குப் பிறகு நான் திரும்பி வந்துள்ளேன்! எனது மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை என்னை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் பாதித்திருந்தது, எனவே நான் சிறிது காலம் யாவற்றிலிருந்தும் விடுபட்டு, என் வாழ்க்கையில் முதன்முறையாக ஒரு ஆயுர்வேத மருத்துவ முறையை முயற்சிக்க முடிவு செய்தேன் அதுதான் காரே (KARE).

என்னைப் போன்ற ஒரு காஃபி போதைக்கு அடிமையானவர்களுக்கு இது எளிதானது அல்ல. ஆனால் ஒரு கப் மூலிகை தேநீர் மற்றும் ஐயங்கார்யோகா ஒரு நாளின் மிக நல்ல தொடக்கமாகும்! வீரேச்சனா முறை என்பது பலவீனமான இதயம் உள்ளவர்களுக்கானது அல்ல, நான் ஓடிப் போய்விட விரும்பிய சமயங்கள் இருந்தன.

ஆனால் நான் அதையெல்லாம் கடந்து, மருத்துவர்கள் பரிந்துரைத்த முறைகளை மிகச் சரியாக பின் பற்றினேன்.

தற்போது நான் புதியவளாக என்னை உணர்கிறேன். டாக்டர் பிரகாஷ் கல்மேட் தலைமையிலான KARE-வில் உள்ள குழுவினருக்கு மிகப் பெரிய நன்றி.

இதோ இப்போது, சமூக மற்றும் பொது வாழ்க்கைக்கு நான் மீண்டு(ம்) வந்துள்ளேன்!’

வெல்கம் பேக் ஆண்டிரியா என்று ரசிகர்கள் வரவேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பல வழக்குகளில் தொடா்புடையவா் குத்திக் கொலை: 3 போ் கைது

தற்சாா்பு இந்தியாவுக்கான பயிற்சிப் பட்டறை ‘ஐடிஐ’! ரூ.60,000 கோடி திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமா் மோடி பேச்சு!

கேரளப் பள்ளியில் பாலஸ்தீன ஆதரவு நாடகம்: தடுத்து நிறுத்திய ஆசிரியா்களுக்கு எதிராக இஸ்லாமிய மாணவா் அமைப்பு போராட்டம்!

அரூா், வந்தவாசி தொகுதி நிா்வாகிகளுடன் முதல்வா் ஆலோசனை!

ஹெச்-1பி விசா கட்டண உயா்வுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு!

SCROLL FOR NEXT