பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த், லண்டனைச் சேர்ந்த இந்தியரைத் திருமணம் செய்துகொண்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
மும்பையில் ஜூலை 20 அன்று ராக்கி சாவந்த் - ரித்தேஷ் ஆகிய இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. லண்டன் வாழ் இந்தியரான 36 வயது ரித்தேஷுடனான காதல் குறித்து ஒரு பேட்டியில் ராக்கி சாவந்த் கூறியதாவத
நான் என்னுடைய ரசிகரைத் திருமணம் செய்துகொண்டுள்ளேன். என்னை மிகவும் ரசிக்கும் ரசிகர் அவர். வழக்கமாக ரசிகர்களிடமிருந்து நூற்றுக்கணக்கான குறுஞ்செய்திகள் எனக்கு வரும். ஒருநாள் நான் மிகவும் கவலையோடு இருந்தேன். அப்போது ஏன் இப்படிக் கவலையாக இருக்கிறீர்கள் என்று கேட்டு எனக்கு வாட்சப்பில் தகவல் அனுப்பினார் ரித்தேஷ். நான் அதிர்ந்துவிட்டேன். நான் அந்த மனநிலையில் உள்ளதாக எப்படி நினைத்தீர்கள் என அவரிடம் கேட்டேன். நீங்கள் என்ன மனநிலையில் இருப்பீர்கள் என்று எண்ணும் அளவுக்கு நான் உங்களுடைய நீண்ட நாள் ரசிகன் என்று பதில் அளித்தார். அப்போதே அவர் மீது காதல் கொண்டேன். அவரை ஒருநாள் திருமணம் செய்வேன் என அப்போதே தெரியும். நான் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவள். அவர் இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர், இந்து மதம். அவருடனான பழக்கம் ஏற்பட்ட பிறகு நான் அவருடைய மனைவியாக வேண்டும் என்று இயேசுவிடம் வேண்டிக்கொண்டேன். அவர், டொனால்ட் டிரம்பின் நிறுவனத்தில் ஊழியராகப் பணிபுரிகிறார்.
நான் ஐட்டம் பாடல்களுக்கு நடிப்பதால் என்னுடைய திருமணச் செய்தியை அறிந்தால் எனக்கு வாய்ப்பு அளிப்பார்களா என அஞ்சினேன். அதனால் தான் என் திருமணச் செய்தியை ரகசியமாக வைத்திருந்தேன். எங்களுக்குக் குழந்தை பிறந்தபிறகு குழந்தைகளுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என்றார். அப்போது அவர் ஊடகங்களைச் சந்திக்கத் தயாராக இருப்பார் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.