அஜித் படத்துடன் மோதும் 5 தமிழ்ப் படங்கள்!
அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படம் நாளை வெளிவருகிற நிலையில் அடுத்த நாளன்று மேலும் 5 தமிழ்ப் படங்கள் வெளிவரவுள்ளன...
அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படம் நாளை வெளிவருகிற நிலையில் அடுத்த நாளன்று மேலும் 5 தமிழ்ப் படங்கள் வெளிவரவுள்ளன.
சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய வினோத், அஜித்தின் அடுத்தப் படத்தை இயக்கியுள்ளார். ஹிந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்காக நேர்கொண்ட பார்வை என்கிற இந்தப் படம் உருவாகியுள்ளது. அமிதாப் பச்சன் நடித்த வேடத்தில் அஜித் நடித்துள்ளார். இந்தப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் இப்படம் பூஜையுடன் தொடங்கியது. ஏப்ரலில் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. இசை - யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு - நிரவ் ஷா. பிரபல பாலிவுட் நடிகையும் தமிழ்ப் பெண்ணுமான வித்யா பாலன், முதல்முறையாக இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ஷரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக்ரவி, போன்றோரும் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இந்தப் படம் நாளை வெளிவரவுள்ளது.
இந்நிலையில் ஆகஸ்ட் 9 அன்று 5 தமிழ்ப் படங்கள் வெளிவரத் திட்டமிட்டுள்ளன. கொலையுதிர் காலம், ரீல், சீமபுரம், வளையல், வினை அறியார் என ஐந்து தமிழ்ப் படங்களும் வெள்ளியன்று வெளியாகவுள்ளதாக விளம்பரங்கள் தெரிவிக்கின்றன. நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர் காலம் படம் பலமுறை தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வாரம் திட்டமிட்டபடி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.