முகப்பு
செய்திகள்

சை ரா நரசிம்ம ரெட்டியில் ‘அனுஷ்கா’ ஏற்கும் வரலாற்றுக் கதாபாத்திரம் யார்?

இந்தக் காட்சியில் அனுஷ்காவுடன் சிரஞ்சீவி தோன்றப்போவதில்லை. ஒருவேளை இருவரும் இணைந்திருக்கும் காட்சிகள் இத்திரைப்படத்தில் இடம்பெறுமாயின் அது சிரஞ்சீவியுடன் அனுஷ்காவுக்கு இரண்டாவது திரைப்படம்

Updated On : 24 ஆகஸ்ட், 2019 at 3:39 PM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 3:24 PM

தெலுங்கில் தயாராகி வரும் ‘சை ரா நரசிம்ம ரெட்டி’ திரைப்படத்தில் சிரஞ்சீவி, நயன் தாராவுடன் மேலும் பல பாலிவுட், கோலிவுட், மல்லுவுட், சாண்டல்வுட் பிரபலங்களும் இணைந்து நடித்துக் கொண்டிருப்பது அனைவருக்கும் தெரிந்த செய்தியே! ஆந்திராவைச் சேர்ந்த விடுதலைப்போராட்ட வீரரான உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இத்திரைப்படத்தில் நரசிம்ம ரெட்டியாக நடித்துக் கொண்டிருப்பது தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, அவருக்கு ஜோடி நயன்தாரா. இவர்களைத் தவிர இத்திரைப்டத்தில் அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, கிச்சா சுதீப் உள்ளிட்டோர் நடித்துக் கொண்டிருப்பது அதிகாரப்பூர்வமாக வெளியான செய்தி. 

இவர்களைத் தவிர இத்திரைப்படத்தில் இன்னொரு லேடி சூப்பர் ஸ்டாரும் இணையவிருக்கிறார். படத்தில் அவர் காட்சிகள் ஹைதராபாத்தில் இருக்கும் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் முன்னரே படமாக்கப்பட்டு விட்டதாக கடந்த வாரத்தில் தெலுங்கு ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கிறது. படத்தில் அனுஷ்கா ஏற்று நடித்திருப்பது விடுதலைப்போராட்ட வீர்ங்கனை ஜான்சி ராணி லட்சுமி பாயின் கதாபாத்திரம் என்கிறார்கள். ஜான்சியின் கதாபாத்திரத்தில் ‘சை ரா ரெட்டியில்’ போர்க்களக் காட்சியில் அறிமுகமாகும் அனுஷ்கா, போர்க்களத்தில் சோர்வுற்றிருக்கும் தனது வீரர்களுக்கு உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் தேசப்பற்று மற்றும் வீரத்தைப் பற்றி வீராவேஷமாக எடுத்தியம்பி மீண்டும் வீரர்களை வீறு கொண்டு எழச்செய்வதாகக் கதையோட்டம். 

இந்தக் காட்சியில் அனுஷ்காவுடன் சிரஞ்சீவி தோன்றப்போவதில்லை. ஒருவேளை இருவரும் இணைந்திருக்கும் காட்சிகள் இத்திரைப்படத்தில் இடம்பெறுமாயின் அது சிரஞ்சீவியுடன் அனுஷ்காவுக்கு இரண்டாவது திரைப்படம் எனலாம். முன்னதாக ‘ஸ்டாலின்’ திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் மட்டும் இருவரும் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

Advertisement

சை ரா நரசிம்ம ரெட்டி திரைபடத்தின் இயக்குனர் சுரேந்தர் ரெட்டி, கொனிடேலா புரடக்‌ஷன் நிறுவனத்துக்காக படத்தை தயாரிப்பது சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண் தேஜா. உடன் இணைந்து வழங்குபவர் சிரஞ்சீவியின் மனைவி சுரேகா கொனிடேலா என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.