செய்திகள்

பிக் பாஸில் 100 நாள்கள் கழித்துத்தான் சம்பளம் கிடைக்கும்: மதுமிதா விவகாரம் குறித்து சாக்‌ஷி அகர்வால்

ஒப்பந்தத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் 100 நாள்களுக்குப் பிறகுதான் சம்பளம் கிடைக்கும் என்று...

எழில்

விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 சமீபத்தில் தொடங்கியுள்ளது. விஜய் டி.வி.யில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு உண்டு. தொலைத் தொடர்பு, இணையம், தொலைக்காட்சி என எந்தத் தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாமல் 100 நாள்கள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி விதி. கடந்த இரண்டு ஆண்டுகளாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த முறையும் தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் முதல் சீஸனை நடிகர் ஆரவ்வும் கடந்த வருட போட்டியை நடிகை ரித்விகாவும் வென்றார்கள். சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக இடம்பெறுவதால் இதில் இடம்பெற்ற போட்டியாளர்கள் அதிகக் கவனம் பெற்று புகழை அடைந்துள்ளார்கள்.

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிக் பாஸ் போட்டியாளர் சாக்‌ஷி அகர்வால், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பிக் பாஸ் நிகழ்ச்சியை சேரன் அண்ணா வென்றால் மகிழ்ச்சியாக இருக்கும். ஆறு வருடங்களாகத் திரைத்துறையில் உள்ளேன். ஆனால் பிக் பாஸில் இருந்த 50 நாள்களினால் கிடைத்த புகழ் நன்றாக உள்ளது. 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மதுமிதா செய்த செயல் தவறானது. எவ்வளவு பிரச்னை இருந்தாலும் இந்தளவுக்குப் போவது தவறானது. அவர் அதைச் செய்திருக்கக் கூடாது. அதேசமயம் அவர் அந்த நேரத்தில் என்ன மனநிலையில் இருந்தார் என்பது தெரியாது. பிக் பாஸில் காண்பிக்காத 23 மணி நேரம் என்ன நடக்கிறது என்பது போட்டியாளர்களுக்குத்தான் தெரியும். 

இப்போது மதுமிதா தொடர்பாக ஒரு வழக்கு போய்க்கொண்டிருக்கிறது. இரு பக்கமும் என்ன நடக்கிறது என்பது எனக்குத் தெரியாது. ஒப்பந்தத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் 100 நாள்களுக்குப் பிறகுதான் சம்பளம் கிடைக்கும் என்று. நாங்கள் எல்லாம் வெளியே வந்துவிட்டோம். நாங்கள் வழக்கு எதுவும் தொடுக்கவில்லை. மதுமிதாவும் அதைச் செய்திருக்கக்கூடாது. அவருடைய ஒப்பந்தத்தில் என்ன கூறப்பட்டிருந்தது என்பது தெரியாது என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏரியில் மூதாட்டி சடலம்

யூரியா சட்டவிரோதமாக பதுக்கல்: கிட்டங்கிக்கு சீல்

கிளை நூலகருக்கு விருது

பாராட்டு கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பழங்குடியினா் ஜனநாயக சீா்திருத்தச் சங்க கிளை திறப்பு

SCROLL FOR NEXT