செய்திகள்

பேபி வோண்ட் யூ டெல் மி... பான் இந்தியன் திரைப்படமென்றால் பாடல்கள் இப்படித்தான் இருக்க வேண்டுமோ?!

பாகுபலி 1 & 2 திரைப்படங்கள் பல மொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதன் பின்னரே பான் இந்தியன் திரைப்படத் திட்டமிடல்கள் நமது இயக்குனர்களிடையே அதிகரித்தன.

சரோஜினி

திரைப்படங்களுக்கு ஆங்கிலக் கலப்பில்லாமல் தமிழில் மட்டுமே பெயர் வைக்கப்பட்டால் வரி விலக்கு அளிக்கப்படும் என கருணாநிதி முதல்வராக இருந்த போது அறிவித்திருந்தார். அதற்காக ஆங்கிலத்தில் பெயரிடப்பட்டிருந்த பல திரைப்படங்களது பெயர்கள் பயன் கருதி தமிழுக்கு மாற்றப்பட்டன. அது ஒரு காலம். இன்றைக்கு என்ன தெரியுமா நடந்து கொண்டிருக்கிறது. பான் இந்தியன் என்று சொல்லப்படக் கூடிய அகில இந்திய மாநில அனைத்து சினிமா ரசிகர்களையும் தியேட்டர்களுக்கு வரவழைக்கத் தக்கவிதமான படங்கள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சுருங்கச் சொல்வதென்றால் இப்போதெல்லாம் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களில் பலவும் ஒரெ மொழிக்கென்று பிரத்யேகமாக எடுக்கப்படுவதில்லை. மல்ட்டி லிங்குவலாக அதாவது பலமொழித் திரைப்படங்களாகவே முன் திட்டமிடலுடன் எடுக்கப்படுகின்றன.

குறைந்த பட்சம் மும்மொழித்திரைப்படம் அல்லது நான்கு மொழித்திரைப்படம் என்பது இப்போது பரவலாகி வருகிறது. இதற்கெல்லாம் பல இயக்குனர்கள் பல சந்தர்பங்களில் பாகுபலிக்கு நன்றி சொல்லியிருக்கிறார்கள். ஏனெனில், பாகுபலி 1 & 2 திரைப்படங்கள் பல மொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதன் பின்னரே பான் இந்தியன் திரைப்படத் திட்டமிடல்கள் நமது இயக்குனர்களிடையே அதிகரித்தன. அதன் பின் வெளியான மல்ட்டி லிங்குவல் திரைப்படங்கள் தான் கே ஜி எஃப், பத்மாவத், மணிகர்னிகா உள்ளிட்டவை. இதோ இத்திரைப்படங்களைத் தொடர்ந்து அதே வரிசையில் வெளிவரவிருக்கிறது பிரபாஸ் மற்றும் ஷ்ரத்தா கபூர் நடிப்பில் ஆகஸ்டு 30 ல் திரைக்கு வரவிருக்கும் சாஹோ திரைப்படம். 

படத்தின் 
இயக்குனர்: சுஜீத்
தயாரிப்பு: U V கிரியேஷன்ஸ் வம்சி & பிரமோத்

இத்திரைப்படத்தில் பிரபாஸ், ஷ்ரத்தா கபூருடன் ஜாக்கி ஷெராஃப், அருண் விஜய், நீல் நிதின் முகேஷ், மந்த்ரா பேடி, டினு ஆனந்த், மகேஷ் மஞ்சுரேக்கர் உள்ளிட்ட பல மொழி நடிகர்கள் இணைந்து நடித்திருக்கிறார்கள். படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் இந்தியில் வெளியாகவிருக்கிறது.

மல்ட்டி லிங்குவல் பான் இந்தியன் திரைப்படம் என்பதாலோ என்னவோ இதுவரை வெளியான இத்திரைப்படத்தின் அத்தனை பாடல்களுமே காதல் சைக்கோ, பேட் பாய், பேபி வோண்ட் யூ டெல் மீ என ஆங்கில வரிகளில் தான் தொடங்குகின்றன. இது தான் பான் இந்தியன் திரைப்படப் பாடல்களுக்கான இலக்கணமாயிருக்குமோ என்னவோ?!

சாஹோ திரைப்படம் வெகு விரைவில் வெளிவரவிருக்கும் நிலையில் படத்திற்கான விளம்பரங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.

படத்தின் புரமோஷன் வேலைகளில் படக்குழுவினர் பிஸியாகச் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

பாகுபலி 2 திரைப்படம் 2017 ஏப்ரல் மாதக் கடைசியில் வெளிவந்தது. அதை அடுத்து பிரபாஸ் நடிக்க ஒப்புக் கொண்ட திரைப்படமே சாஹோ. கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரபாஸ் வேறு எந்தத் திரைப்படத்தையும் ஒப்புக் கொண்டிராத நிலையில் இத்திரைப்படம் பிரபாஸ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட். அக்கட பூமி சாஹோவுக்காக மிகப்பிரமாண்டமான கட் அவுட் எல்லாம் வைத்து பட வெளியீட்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. ஆக்‌ஷன் திரில்லர் ஜானரில் வெளிவரவிருக்கும் சாஹோ, பாகுபலி 1 & 2 போலவே அனைத்திந்திய ரசிகர்களைக் கவர்ந்திழுக்குமா என்பது ஆகஸ்டு 30 ஆம் தேதி தெரிய வரும்.

படத்திற்காக போஸ்டர்கள் ஆரம்பத்தில் ஈர்க்கும் விதமாக அமைந்திராத போதும் தற்போது வெளியீட்டை ஒட்டி வெளிவிடப்படும் ஒவ்வோரு போஸ்டருமே சமூக வலைத்தளங்களில் ஹிட் அடித்துக் கொண்டிருக்கின்றன. முகப்புப் படம் சாஹோவின் புதிய போஸ்டர் லுக்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிற்பயிற்சி மையத்தில் அக்கவுண்ட் ஆபீசர் பணி

நடிகர் மதன் பாப் உடல் தகனம்

“Button Phone போதும்!” எனக்கு போனில் பேசப் பிடிக்காது! கேப்டன் எம்.எஸ்.தோனி

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

ருதுராஜ் வருகிறார், மினி ஏலத்தில் ஓட்டைகளை அடைப்போம்: எம்.எஸ்.தோனி

SCROLL FOR NEXT