செய்திகள்

ஆர்யா நடித்துள்ள 'மகாமுனி': நச்சென்ற நான்கு நிமிடக் காட்சி வெளியீடு 

'மெளனகுரு ' திரைப்பட இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள மகாமுனி படத்திலிருந்து நான்கு நிமிடக்காட்சி வெளியாகியுள்ளது.

DIN

சென்னை: 'மெளனகுரு' திரைப்பட இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள மகாமுனி படத்திலிருந்து நான்கு நிமிடக்காட்சி வெளியாகியுள்ளது.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள மகாமுனி படத்தில் ஆர்யா, நடிகை மஹிமா நம்பியார், இந்துஜா, ஜுனியர் பாலையா, ஜெயப்ரகாஷ், அருள்தாஸ், ஜி எம் சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் சாந்தகுமார். இவர் ஏற்கெனவே மெளனகுரு படத்தை இயக்கி கவனம் ஈர்த்தவர்.

சாந்தகுமாரின் படம் என்பதால் இந்தப் படத்துக்கு ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் இந்தப் படம் செப்டம்பர் 6-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மகாமுனி படத்திலிருந்து நான்கு நிமிடக்காட்சி 'ஸ்னீக் பீக்' என்ற வகையில்  வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

விலை குறையும் ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, ஃபிராங்க்ஸ், பிரெஸ்ஸா வாகனங்கள்!

கோவையில் வெளியிடப்படும் இட்லி கடை டிரைலர்..! எப்போது?

டிரம்ப் வருகைக்கு எதிராக லண்டனில் போராட்டம்!

முதல் டி20: இருவர் அரைசதம் விளாசல்; இங்கிலாந்துக்கு 197 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT