முகப்பு
செய்திகள்

தீபாவளியன்று விஜய், விஜய் சேதுபதி படங்களுடன் மோதவுள்ள கார்த்தியின் கைதி!

ஒரே நாளில் விஜய் நடித்த பிகில், கார்த்தி நடித்த கைதி, விஜய் சேதுபதி நடித்த சங்கத் தமிழன் ஆகிய படங்கள் மோதவுள்ளன.

Updated On : 28 ஆகஸ்ட், 2019 at 11:06 AM
பகிர்:

மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள கைதி படத்தை இயக்கியுள்ளார். இசை - சாம் சிஎஸ். 

கதாநாயகி இல்லாத, முற்றிலும் இரவுக்காட்சிகளாக கொண்ட இப்படம் தீபாவளியன்று வெளியாகும்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஒரே நாளில் விஜய் நடித்த பிகில், கார்த்தி நடித்த கைதி, விஜய் சேதுபதி நடித்த சங்கத் தமிழன் ஆகிய படங்கள் மோதவுள்ளன.விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள சங்கத் தமிழன் படமும் தீபாவளிக்கு வெளிவரும் எனச் சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதனிடையே விஜய்யின் அடுத்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.