முகப்பு
செய்திகள்

இந்த வாரம் முதல் படப்பிடிப்பு தொடக்கம்: தீபாவளிக்கு வெளியாகவுள்ள அஜித்-வினோத்தின் வலிமை!

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படம் அடுத்த வருட தீபாவளிக்கு வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. 

Updated On : 9 டிசம்பர், 2019 at 10:55 AM
பகிர்:

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படம் அடுத்த வருட தீபாவளிக்கு வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. 

நேர் கொண்ட பார்வை படத்துக்குப் பிறகு அஜித் - இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணி மீண்டும் தொடர்கிறது. இருவரும் இணையும் இப்படத்துக்கு வலிமை எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் புதன் முதல் ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் பூஜை நிகழ்ச்சியுடன் தொடங்கவுள்ளது. ஆரம்பத்தில் அஜித் தொடர்பான காட்சிகளே படமாக்கப்படவுள்ளன.  கதாநாயகி யார் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. 

Advertisement

போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு இசை - யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு - நிரவ் ஷா. வலிமை படம் தீபாவளிக்கு வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.