முகப்பு
செய்திகள்

கார்த்தி நடித்த தேவ் உள்பட இந்த வாரம் வெளியாகும் நான்கு தமிழ்ப் படங்கள்!

கார்த்தி நடிப்பில் இதற்கு முன்பு வெளியான தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம் ஆகிய படங்கள் வெற்றியடைந்ததால்...

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:07 AM
பகிர்:

பொங்கல் சமயத்தில் வெளியான பேட்ட, விஸ்வாசம் ஆகிய படங்களுக்குப் பிறகு தமிழ்த் திரையுலகம் அந்தளவுக்குச் சுறுசுறுப்பாக இல்லை. பொங்கலுக்குப் பிறகு வெளியான படங்கள் வசூலில் பெரிய கவனத்தை ஈர்க்கவில்லை. இந்நிலையில் இந்த வாரம் பிப்ரவரி 14, 15 ஆகிய தேதிகளில் நான்கு படங்கள் வெளியாகவுள்ளன. 

கார்த்தி நடித்த தேவ், பிரியா வாரியர் நடித்த ஒரு அடார் லவ் (டப்பிங்), காதல் மட்டும் வேணா,  சித்திரம் பேசுதடி 2 என நான்கு தமிழ்ப் படங்கள் இந்த வாரம் வெளியாகவுள்ளன.

கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் புதுமுக இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'தேவ்' இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். கார்த்தி நடிப்பில் இதற்கு முன்பு வெளியான தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம் ஆகிய படங்கள் வெற்றியடைந்ததால் இந்தப் படத்தின் முடிவு குறித்து ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.