செய்திகள்

அர்ஜூன் ரெட்டி தமிழ் ரீமேக்: புதிய கதாநாயகி ஒப்பந்தம்!

கடந்த வருடம் வெளியான ஹிந்திப் படமான அக்டோபர் படத்தில் அறிமுகமாகிக் கவனம் பெற்ற...

எழில்

அர்ஜூன் ரெட்டி என்கிற தெலுங்குப் படம் 2017-ல் வெளியாகி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது. விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் சந்தீப் வங்கா இயக்கிய படத்துக்கு நல்ல விமரிசனங்கள் கிடைத்தது மட்டுமல்லாமல் வசூலிலும் அசத்தியது. 

இந்தப் படம் தமிழில் வர்மா என்கிற பெயரில் ரீமேக் ஆனது. பிரபல இயக்குநர் பாலா இயக்கினார். விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக இப்படத்தின் மூலமாக அறிமுகமானார். வங்காள நடிகையான மேகா செளத்ரி, துருவ் ஜோடியாக நடித்தார். ஈஸ்வரி ராவ், பிக் பாஸ் ரைஸா போன்றோரும் இப்படத்தில் நடித்தார்கள். இயக்குநர் ராஜூ முருகன் வசனம் எழுதினார். அர்ஜூன் ரெட்டி படத்துக்கு இசையமைத்த ரதன், வர்மா படத்துக்கும் இசையமைத்தார். இது அவருடைய 4-வது தமிழ்ப்படம். விகடகவி, வாலிபராஜா, டார்லிங் 2 ஆகிய படங்களுக்கு ரதன் இசையமைத்துள்ளார். பிப்ரவரி 14 அன்று வெளிவருவதாக இருந்த வர்மா படம் திடீரென கைவிடப்பட்டது. படத்தின் இறுதி வடிவம் குறித்து பாலா - தயாரிப்பாளர் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் இந்த நிலை உருவானது. இயக்குநர் உள்ளிட்ட புதிய படக்குழுவினரும் கதாநாயகியும் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அர்ஜூன் ரெட்டி தமிழ் ரீமேக்குக்குப் புதிய கதாநாயகி தேர்வாகியுள்ளார். கடந்த வருடம் வெளியான ஹிந்திப் படமான அக்டோபர் படத்தில் அறிமுகமாகிக் கவனம் பெற்ற பனிதா சந்து கதாநாயகியாகத் தேர்வாகியுள்ளார். பனிதா, லண்டனில் பிறந்த பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்தவர். இத்தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் சந்தீப் வங்காவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர், தமிழ் ரீமேக்கை இயக்குவார் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வத் தகவல் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓய்வு பெற்ற பணியாளா்களுக்கு ரூ.1.28 கோடியில் பணப் பலன்

திருநங்கைகளின் 2 நாள் போராட்டம்: பேச்சுவாா்த்தையில் தீா்வு

அம்பையில் இளைஞா் தற்கொலை

சாத்தான்குளம் அருகே விபத்து: தொழிலாளி காயம்

தனியாா் நிறுவனத்தில் மின் குழாயில் சிக்கிய மரநாய் மீட்பு!

SCROLL FOR NEXT