செய்திகள்

நான் என்ன அஜித்தா? விஜய்யா? எல்.கே.ஜி படம் குறித்து ஆர்ஜெ பாலாஜி நேர்காணல்!

உமா ஷக்தி.

இது ஒரு காமெடி படம் மட்டும் இல்லை! சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்ட படம் என்றார் அண்மையில் எல்.கே.ஜி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பிரியா ஆனந்த். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் நடித்ததில் தனக்கு மகிழ்ச்சி என்றார். 'இந்தப் படத்தில் எல்லாமே ஆர்ஜெ. பாலாஜி எழுதின டயலாக்ஸ்தான். பாலாஜி பெண்களை மதிப்பவர். இந்தப் படத்தில் என்னோட காரெக்டரை மிக அழகாக எழுதியிருக்கிறார். மிக்க நன்றி. நிச்சயம் பார்த்து ரசியுங்கள்’ என்றார்.

அடுத்து பேசிய பாலாஜி இப்படத்தைப் பற்றிக் கூறுகையில், 'யூ சர்டிபிகேட் வாங்கி, குடும்பத்துடன் பார்க்க கூடிய படங்களிலும் கூட சில எரிச்சலூட்டும் காட்சிகள் இருக்கும்.பல நெகடிவ் காட்சிகள் உண்டு. அந்த மாதிரி இல்லாமல், லவ் பண்ணலைன்னாலும் ஒரு பொண்ணுக்கும் ஆணுக்கும் ஒரு நல்ல உறவு இருக்க முடியும்னு இந்தப் படம் சொல்லும். சில விஷயங்களில் நான் சொல்லியாக வேண்டும், நான் 2017-ம் ஆண்டு காமெடி ரோலில் நடிப்பதை நிறுத்தினேன். நான் நடித்த படங்கள் நல்ல படம்தான், ஆனால் திருப்தியாக இல்லை. நான் எனக்கு இன்வெஸ்ட் பண்ணியதுதான் இந்தப் படம் எல்.கே.ஜி. கதை திரைக்கதை எழுதணும்னு ப்ளான் இல்லை. ஆனால் ஒரு சமூக சிந்தனையுடன் கூடிய படம் எடுக்கணும்னு ஆசைப்பட்டேன். சென்னை வெள்ளத்துல இளைஞர்கள் உதவிக்கு வந்தார்கள். ஆனால் அப்ப நடந்த எலக்‌ஷன்ல 57% தான் ஓட்டு போடத்தான் வந்தாங்க. ஏன்னு தெரியலை. எந்த கட்சி, யார் வேட்பாளர் என்று தெரியவில்லை அதனால் ஓட்டுப் போடலை என்று பல இளைஞர்கள் சொன்னார்கள். இது என்னுடைய பொறுப்புணர்வை அதிகரித்தது. அதனால தான் இந்தப் படம். நிச்சயம் இது குறித்த புரிதலை ஏற்படுத்த வேண்டும். அரசியல்வாதிகளை கிண்டல் பண்ணற படம் கிடையாது. போகிற போக்கில் சில கிண்டல் இருக்கும். ஆனால் அது கிடையாது இந்தப் படம். விரைவில் நடக்கவிருக்கிற எலக்‌ஷன்ல, ஓட்டுப் போடறதுக்கு முன்னாடி பத்து நிமிஷம் யோசித்தால், இந்தப் படத்துக்கு கிடைத்த வெற்றி.

இப்ப இருக்கற இளைஞர்களை இன்ஸ்பையர் பண்ண யாருமில்லை. அதை ஏன் செய்யக் கூடாதுன்னு நினைச்சேன். கடந்த ஒரு வருஷமா மீடியாவுல நான் எதுவும் பேசவில்லை, காரணம் என் படம் பேச வேண்டும் என்று நினைக்கிறேன். இப்ப ஐம் பேக்.. அரசியலுக்கு வருவதற்காக இந்தப் படத்தை நான் பண்ணலை. அரசியல்வாதிகளையும் கிண்டல் பண்றதுக்காகவும் இல்லை. நியாயமா ஒரு இளைஞனுக்கு இருக்கக் கூடிய உணர்வுகளை பேசறதுதான் இந்தப் படம். படம் பார்க்கும் எல்லாருக்கும் இது பிடிக்கும்’ என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT