செய்திகள்

பால் அபிஷேகம் செய்தபோது சரிந்த அஜித் கட் அவுட்:  ரசிகர்கள் மருத்துவமனையில் அனுமதி!  (விடியோ)

அஜித் கட் அவுட்டுக்குப் பால் அபிஷேகம் செய்ய அஜித் ரசிகர்கள் சிலர் கட் அவுட் மீது ஏறினார்கள்... 

எழில்

அஜித் - சிவா ஆகிய இருவரும் மீண்டும் இணைந்துள்ள படம் - விஸ்வாசம். கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ஜகபதி பாபு, விவேக், யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, கோவை சரளா போன்றோரும் நடித்துள்ளார்கள். இப்படத்துக்கு இசை - இமான்; ஒளிப்பதிவு - வெற்றி. இன்று வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் ஸ்ரீனிவாசா திரையரங்கில் 60 அடி அஜித் கட் அவுட் அமைக்கப்பட்டிருந்தது. இன்று அஜித் கட் அவுட்டுக்குப் பால் அபிஷேகம் செய்ய ரசிகர்கள் சிலர் கட் அவுட் மீது ஏறினார்கள். அஜித் கட் அவுட்டுக்கு மாலை அணிவித்து பிறகு பால் அபிஷேகம் செய்தார்கள். அப்போது கூடுதலாகச் ரசிகர்கள் சிலரும் கட் அவுட் மீது ஏறினார்கள். இதனால் பாரம் தாங்காமல் அஜித் கட் அவுட் அப்படியே சரிந்தது. இதை எதிர்பாராத அஜித் ரசிகர்கள் சிலர் உடனடியாகக் குதித்தார்கள். இந்தச் சம்பவத்தில் 6 அஜித் ரசிகர்கள் படுகாயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 6 பேரும்  சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனமே நலமா? ஸ்வாதிஷ்டா கிருஷ்ணன்!

ஓடிடியில் தி கேம்!

மழைநீர் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்த முதல்வர்! | DMK | Chennai | MK Stalin

இருள் நிலவு... சாக்‌ஷி மாலிக்!

நடிகர் அஜித்குமாருக்கு நன்றி தெரிவித்த உதயநிதி!

SCROLL FOR NEXT