முகப்பு
செய்திகள்

சிம்பு... இது பப்ளிசிட்டி ஸ்டண்ட்டா இல்ல ரியலா? ஒன்னுமே புரியல உலகத்துல!

ரசிகர் இறந்து ஓராண்டு கழிந்த பின்னர் சிம்பு திடீரென அவர்களது வீட்டிற்குச் சென்று அஞ்சலி செலுத்துவது அவர்களுக்கு வேடிக்கையாக இருந்திருக்கலாம்.

Updated On : 29 ஜனவரி, 2019 at 12:32 PM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 12:30 PM

நேற்று ஊடகங்களில் ட்ரெண்ட் அடித்து வருகிறது ஒரு விடியோ. ஒரு வருடத்துக்கு முன்பு இறந்து விட்ட தனது ரசிகர் ஒருவரது வீட்டுக்கு இப்போது நேரில் சென்ற சிம்பு, அவரது பெற்றோருக்கு புடவை, வேஷ்டி வாங்கித் தந்து நானும் உங்கள் மகன் தான், என் பெற்றோருக்குத் தர வேண்டிய வேஷ்டி, புடவையை உங்களுக்கு அளித்து அவர்களுக்கு இணையாக இனி நான் உங்களையும் கருதுவேன் என்பதை உறுதிப் படுத்துகிறேன். உங்கள் மகனை அவன் உயிருடன் இருக்கும் போது நான் பல தடவை அழைத்துப் பேசி இருக்கிறேன். அவனது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். என்று தனது மன வருத்தத்தைப் பதிவு செய்யும் விடியோ தான் அது. அதில் இறுதியாக.. இறந்து புகைப்படமாகி மாலை சூட்டப்பட்டுள்ள தனது ரசிகரின் நிழற்படத்தருகே செல்லும் சிம்பு, நீ இல்லாம நான் இல்லைடா, என்னை மன்னிச்சிடுடா; என்கிறார். இதைக் கண்டு கீழே நீண்டிருக்கும் கருத்துரைகளில் பலவும் இது சிம்புவின் ரியாலிட்டி இல்லை அடுத்த படத்திற்கான புரமோஷன் ஸ்டண்ட் என்று இடித்துரைக்கிறார்கள் பலர். அவர்களது இடித்துரைப்பில் நியாயம் இல்லாமலும் இல்லை.

ரசிகர் இறந்து ஓராண்டு கழிந்த பின்னர் சிம்பு திடீரென அவர்களது வீட்டிற்குச் சென்று அஞ்சலி செலுத்துவது அவர்களுக்கு வேடிக்கையாக இருந்திருக்கலாம்.

நடிகர்கள் இம்மாதிரியான அஞ்சலி நிகழ்ச்சிகளையாவது தனிப்பட்ட முறையில் யாருக்கும் அறிவிக்காமல் நிகழ்த்திக் கொண்டால் குறைந்தபட்சம் அவர்களது கெளரவத்திற்கு பங்கமேற்படாமல் காத்துக்கொள்ளலாம்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.