முகப்பு
செய்திகள்

திரைப்பட இயக்குநர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து பாரதிராஜா திடீர் ராஜிநாமா!

திரைப்பட இயக்குநர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து இயக்குநர் பாரதிராஜா திடீர் ராஜிநாமா செய்துள்ளார்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:24 AM
பகிர்:


திரைப்பட இயக்குநர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து இயக்குநர் பாரதிராஜா திடீர் ராஜிநாமா செய்துள்ளார்.

இயக்குநர் விக்ரமன் தலைமையிலான குழு, தமிழ் திரைப்பட இயக்குநர் சங்க நிர்வாகத்தைக் கவனித்து வந்தது. இந்த நிர்வாகத்தின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, புதிய நிர்வாகக் குழு தேர்வு செய்யப்பட வேண்டும்.

இயக்குநர் சங்கத்தின் பொதுக்குழு கடந்த 10-ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பெரும்பான்மையான உறுப்பினர்கள் தேர்தல் வேண்டாம் என்ற கருத்தை முன்வைத்தனர். இறுதியாக தலைவர் பதவிக்கு மட்டும் பாரதிராஜாவை முன்மொழிந்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பாரதிராஜாவுக்கு பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவு இருந்ததால், அவரே தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல், வரும் ஜூலை 14-இல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார் பாரதிராஜா. இதுகுறித்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளதாவது:

தேர்தலில் போட்டியிடாமல் ஒரு பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அதனால் ஏற்படும் சங்கடங்களை நான் நன்கு உணர்ந்துள்ளேன். ஜனநாயக முறைப்படி தலைவரைத் தேர்ந்தெடுக்க வசதியாக எனது தலைவர் பதவியை ராஜிநாமா செய்ய முன்வந்துள்ளேன் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.