செய்திகள்

டாஸ்மாக் கடையை மூடச் சொன்னதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா? கொதிக்கும் நெட்டிசன்கள்

டாஸ்மாக் மதுபான கடைக்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காக, கடந்த 2014-ம் ஆண்டு சட்டக் கல்லூரி மாணவி நந்தினி

சினேகா

டாஸ்மாக் மதுபான கடைக்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காக, கடந்த 2014-ம் ஆண்டு சட்டக் கல்லூரி மாணவி நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் மீது திருப்பத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கு இந்த ஆண்டு ஜூன் 27-ம் தேதி விசாரணைக்கு வந்தது. 

வழக்கில் தன் தரப்பில் வாதாடிய நந்தினி, டாஸ்மாக் மூலமாக போதைப் பொருள் விற்கப்படுவது மற்றும் விநியோகிப்பது குற்றமில்லையா என்று கேட்டார். இதனால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நந்தினியும் அவரது தந்தை ஆனந்தனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

வழக்கறிஞர் நந்தினிக்கு ஜூலை 5-ம் தேதி திருமணம் நடைபெற இருக்கும் நிலையில், அவரை ஜூலை 9-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை எதிர்த்து, சமூக வலைதளங்களில் நந்தினிக்கு ஆதரவாக சமூக ஆர்வலர்கள் இளைஞர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். நந்தினிக்கு விரைவில் விடுதலை தரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழக்கறிஞர் நந்தினி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திரைப்பட இயக்குநர் ராஜூமுருகன் குரல் கொடுத்துள்ளார்.

தனது டிவிட்டரில் நந்தினி கைது குறித்து தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசியக்கொடியை இடுப்பில் கட்டி வந்தவா் கைது

சிறுமி கா்ப்பம்: சிறுவன் கைது

அதிராம்பட்டினத்தில் ஆக. 25 இல் மின்தடை

ஆக. 26-இல் மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம்

செயற்கை உரத் தட்டுப்பாட்டைத் தடுக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

SCROLL FOR NEXT