செய்திகள்

இந்த மோகினிப் பிசாசு பெண்ணுக்குள் இத்தனை நளினமா?

மோனலிஸாவின் இயற்பெயர் அண்டாரா பிஸ்வாஸ். போஜ்பூரியில் இதுவரை 125 திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்பதோடு ஹிந்தி பிக்பாஸ் சீஸன் 10 ல் சக போட்டியாளர்களில் ஒருவராகவும் இருந்திருக்கிறார் என்பது

சரோஜினி

சமீபகாலங்களில் சேனல்கள் தோறும் ஒளிபரப்பாகி வரும் அமானுஷ்யத் தொடர்களில் குறிப்பிடத்தக்கது ‘அதே கண்கள்’ என்றொரு டப்பிங் மெகாத்தொடர். இதில் மோகினிப் பிசாசாக நடித்துக் கொண்டிருப்பது போஜ்புரி நடிகை மோனாலிஸா. இவர் ஆரம்ப காலங்களில் பாலிவுட் படங்களில் துண்டு துக்கடா வேடங்களில் நடித்துப் பின் ஐட்டம் சாங் என்று சொல்லக்கூடிய சோலோ சாங் வரை முன்னேறியவர். அப்படி எல்லாம் ஆடித் திறமையை வெளிக்காட்டியும் படங்களில் பிரதான வேடங்கள் கிடைக்கவில்லை. அவ்வப்போது சந்தில் சிந்து பாடும் வேடங்கள் போரடித்துப் போக ஆரம்பித்த காலங்களில் ஒரிய மொழிப் படங்களும் போஜ்பூரி படங்களும் கை கொடுக்கத் தொடங்கின. கூடவே சின்னத்திரையில் பிரதான வேடங்களும் கை கொடுக்க இப்போது நாடறிந்த நடிகையாகி விட்டார்.

சரி இப்போ அதுக்கென்ன? என்று கேட்பவர்களுக்கு; அம்மணி சமீபத்தில் வெளிவந்து ஹிட் அடித்த பாலிவுட் திரைப்படங்களில் ஒன்றான ‘லவ் யாத்ரி’யின் கமாரியா பாடலுக்கு நடனமாடி அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

பார்க்கும் போது இந்த பிசாசு பெண்ணுக்குள் இப்படி ஒரு நளினமான ஆசையா என்று இருக்கிறது. மோனலிஸாவின் இயற்பெயர் அண்டாரா பிஸ்வாஸ். போஜ்பூரியில் இதுவரை 125 திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்பதோடு ஹிந்தி பிக்பாஸ் சீஸன் 10 ல் சக போட்டியாளர்களில் ஒருவராகவும் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோனாலிஸாவின் நடிப்பில் குறை காணமுடியாததைப்போல அவரது நடனத்திலும் குறை காண முடியாது என்று அவரது இன்ஸ்டாகிராம் ரசிகர்கள் மோனாலிஸாவின் நடனத்தை வெகுவாகப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்கள். இப்படித்தான் தனது ஃபாலோயர்களுக்கு அடிக்கடி இன்ப அதிர்ச்சி கொடுத்து இதுவரையிலும் சுமார் 2 மில்லியன் ஃபாலோயர்களைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் மோனா அலைஸ் அதே கண்கள் மோகனா.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புளிய மரத்தில் கார் மோதி விபத்து: 3 பேர் பலி, ஓட்டுநர் படுகாயம்

நீட் முதுநிலை தேர்வு எழுதியவர்களுக்கு எச்சரிக்கை!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் கல்லணைக் கால்வாய் நீரில் மூழ்கி பலி

சிர்கா பெயிண்ட்ஸ் லாபம் 39 சதவிகிதம் உயர்வு!

டுவைன் பிராவோவின் சாதனையை முறியடித்த ஜேசன் ஹோல்டர்!

SCROLL FOR NEXT