முகப்பு
செய்திகள்

நடிகர் சங்கத் தேர்தல்: விஷாலின் கோரிக்கை நிராகரிப்பு! 

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெபெற்றது. நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளை இப்போது எண்ணமுடியாது என்று கூறிய உயர் நீதிமன்றம், விசாரணை நிலுவையில் உள்ளதால் வாக்கு எண்ணிக்கையை...

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:28 AM
பகிர்:

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை திட்டமிட்டபடி ஜூன் 23 நடத்த உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை வாக்கு எண்ணிக்கையை நடத்தக் கூடாது என உத்தரவிட்டது. இந்நிலையில் விஷால் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில் நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணவேண்டும் என் விஷால் தரப்பில் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெபெற்றது. நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளை இப்போது எண்ணமுடியாது என்று கூறிய உயர் நீதிமன்றம், விசாரணை நிலுவையில் உள்ளதால் வாக்கு எண்ணிக்கையை அனுமதிக்க முடியாது என்றும் கூறியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.