முகப்பு
செய்திகள்

லண்டன் பெண்ணைக் காதலிக்கும் ஷாருக் கானின் மகன்!

பிரபல நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன், லண்டனைச் சேர்ந்தவரைக் காதலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:35 AM
பகிர்:

பிரபல நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன், லண்டனைச் சேர்ந்தவரைக் காதலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஷாருக் கானுக்கு இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளார்கள். இவர்களில் மூத்த மகன், ஆர்யன். சமீபத்தில் வெளியான தி லயன் கிங் படத்தில் சிம்பாவுக்கு ஆர்யன் குரல் கொடுத்துள்ளார். இந்நிலையில் மேற்படிப்புக்காக லண்டனில் வசித்துவரும் ஆர்யன், லண்டனைச் சேர்ந்த வலைப்பதிவரைக் காதலித்து வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தப் பெண்ணை ஷாருக் கானின் மனைவி கெளரி சந்தித்துப் பேசியதாகவும் கூறப்படுகிறது. ஆர்யன் ஒரு பெண்ணுடன் இருக்கும் படமொன்று சமூகவலைத்தளத்தில் வெளியானது. ஆனால் அந்தப் படத்தில் உள்ள பெண்தான் ஆர்யனின் காதலியா என்பது உறுதி செய்யப்படவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.