முகப்பு
செய்திகள்

தி லயன் கிங்: இந்தியாவில் முதல் நாளன்று நல்ல வசூல்!

லயன் கிங் படம் இந்தியாவில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு என நான்கு மொழிகளில் 2140 திரையரங்குகளில் நேற்று வெளியாகியுள்ளது. 

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:35 AM
பகிர்:

உலகம் முழுக்க வசூலில் சாதனை நிகழ்த்திய தி ஜங்கிள் புக் படத்தை இயக்கிய ஜோன் ஃபவ்ரே தற்போது தி லயன் கிங் படத்தை இயக்கியுள்ளார். 1994-ல் அனிமேஷன் படமாக வெளிவந்த படத்தின் ரீமேக்தான் இது. 

லயன் கிங் படம் இந்தியாவில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு என நான்கு மொழிகளில் 2140 திரையரங்குகளில் நேற்று வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் முதல் நாளன்று இந்தப் படம் இந்தியாவில் நான்கு மொழிகளிலும் சேர்த்து ரூ. 13 கோடி வசூலித்துள்ளது. இது இந்தியாவில், ஸ்பைடர் மேன் ஃபார் ஃப்ரம் ஹோம் படத்தின் வசூலை விடவும் அதிகம். இதனால் சனி, ஞாயிறு கிழமைகளில் இந்தப் படம் மேலும் அதிக வசூலை அள்ளி சாதனைகள் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.