த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
ஜோடி, பேட்ட படங்களுக்குப் பிறகு மற்றொரு படத்தில் த்ரிஷாவும் சிம்ரனும் இணைந்து நடிக்கிறார்கள்.
ஜோடி, பேட்ட படங்களுக்குப் பிறகு மற்றொரு படத்தில் த்ரிஷாவும் சிம்ரனும் இணைந்து நடிக்கிறார்கள்.
சதுரம் 2 படத்தை இயக்கிய சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கும் இப்படத்துக்கு சுகர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் இப்படத்தில் ஆக்ஷன் காட்சிகள் அதிகமுள்ளன.
கொரில்லா படத்தைத் தயாரித்த ஆல் இன் பிக்சர்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. சென்னை, பிச்சாவரம், கேரளா, தாய்லாந்து ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. சுகர் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.