யோகி பாபு நடிக்கும் மண்டேலா!
இப்படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் பாலாஜி மோகன், ஓபன் விண்டோ என்கிற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம் வொய் நாட் ஸ்டூடியோஸ், ரிலையன்ஸ் எண்டர்டெயிண்ட்மெண்ட் நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்கும் படம் - மண்டேலா.
தர்மம் என்கிற குறும்படத்துக்காகத் தேசிய விருது பெற்ற மடோன் அஸ்வின் இயக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் யோகி பாபு. இப்படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இன்று முதல் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.