ஜூன் 25 முதல் ‘மாநாடு’ படப்பிடிப்பு!
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படம் ஜூன் 25 முதல் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது...
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படம் ஜூன் 25 முதல் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இப்படத்தில் கல்யாணி பிரியர்தர்ஷன் சிம்புவின் ஜோடியாக நடிக்கவுள்ளார். இது இவர் நடிக்கும் 2-வது தமிழ்ப்படம். ‘இரும்புத்திரை’ மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ படத்தில் அவர் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
மாநாடு படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். ஒளிப்பதிவு - ஏகாம்பரம். இசை - யுவன் சங்கர் ராஜா. ஜூன் 25 முதல் மலேசியாவில் மாநாடு படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.