‘இருமுகன்’ இயக்குநர் ஆனந்த் சங்கருக்கு விரைவில் திருமணம்! (படங்கள்)
அரிமா நம்பி, இருமுகன், நோட்டா படங்களை இயக்கிய ஆனந்த் சங்கருக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது...
அரிமா நம்பி, இருமுகன், நோட்டா படங்களை இயக்கிய ஆனந்த் சங்கருக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது.
திவ்யங்கா ஜீவானந்தத்தை ஜூலை 11 அன்று சென்னையில் திருமணம் செய்யவுள்ளார் இயக்குநர் ஆனந்த் சங்கர்.
இவர்களுடைய திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் துபையில் நடைபெற்றது. இதன் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்தார் ஆனந்த் சங்கர். இந்நிலையில் இந்தக் காதல் ஜோடியின் திருமணச் செய்தி தற்போது வெளியாகியுள்ளது.