FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

சிஎஸ்கே பிளேயிங் லெவனில் அகீல் ஹொசைனுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

மேற்கிந்தியத் தீவுகள் வீரர் அகீல் ஹொசைனுக்கு சிஎஸ்கேவில் வாய்ப்பு கிடைக்குமா என்பது பற்றி...

Updated On : 30 மார்ச் 2026, 6:12 pm IST
அகீல் ஹொசைன். - படம்: சிஎஸ்கே.
பகிர்:

மேற்கிந்தியத் தீவுகள் வீரர் அகீல் ஹொசைனுக்கு சிஎஸ்கே பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த சீசனில் சிஎஸ்கே அணி தனது முதல் போட்டியில் ராஜஸ்தானை எதிர்த்து விளையாடுகிறது. இந்தப் போட்டியில் அகீல் ஹொசைனுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் வீரர் அகீல் ஹொசைன் (32 வயது) சிஎஸ்கே அணிக்கு ரூ.2 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். இவர் பவர்பிளேவில் சிறப்பாக பந்துவீசும் திறன் கொண்டவர்.

Advertisement

Advertisement

ஐபிஎல் போட்டிகளைப் பொறுத்தவரை பவர்பிளே மிகவும் முக்கியமானது. சிஎஸ்கே அணிக்கு நாதன் எல்லீஸ் இல்லாத காரணத்தால் மாட் ஹென்றி களமிறக்கப்படலாம். இவருடன் சேர்ந்து அகீல் ஹொசைன் பந்துவீசினால் ரன்களைக் கட்டுப்படுத்தலாம்.

பேட்டிங் திறமையும் இருப்பதால், அகீல் ஹொசைன் மிகவும் சிறப்பான தேர்வாக அமையலாம். மேற்கிந்தியத் தீவுகள் வீரர் சிஎஸ்கே அணிக்கு இதுவரை நல்ல பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால், இவரை பிளேயிங் லெவனில் எடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

summary

Will Akeal Hosein get a chance in the CSK Playing XI?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments