FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

முதல் டெஸ்ட்: காவெம் ஹாட்ஜ் அரைசதம்; மே.இ.தீவுகள் நிதான ஆட்டம்!

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் எடுத்துள்ளது.

Updated On : 26 ஜூலை 2026, 4:54 pm IST
காவெம் ஹாட்ஜ் (கோப்புப் படம்) - படம் | AP
பகிர்:

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் எடுத்துள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று (ஜூலை 25) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

காவெம் ஹாட்ஜ் அரைசதம்!

Advertisement

Advertisement

டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் எடுத்துள்ளது.

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சந்தர்பால் 21 ரன்களும், பிரண்டன் கிங் 12 ரன்களும் எடுத்தனர். அதன் பின், அமிர் ஜாங்கோ 21 ரன்களில் ஆட்டமிழக்க, காவெம் ஹாட்ஜ் மற்றும் சாய் ஹோப் ஜோடி சேர்ந்தனர்.

இந்த இணை நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய காவெம் ஹாட்ஜ் அரைசதம் கடந்து அசத்தினார். காவெம் ஹாட்ஜ் 83 ரன்களுடனும், சாய் ஹோப் 39 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

பாகிஸ்தான் தரப்பில் முகமது அப்பாஸ் இரண்டு விக்கெட்டுகளையும், அமர் ஜமால் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

summary

Batting first in the Test match against Pakistan, the West Indies team has scored 194 runs for the loss of 3 wickets in the first innings.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments