செய்திகள்

மோகன் லால் பட இசையமைப்பாளர், ஹிந்திப் பட நடிகர் என முன்னேறும் 13 வயது லிடியன் நாதஸ்வரம்!

குழந்தைகளுக்கான படமென்பதால் லிடியனைத் தேர்வு செய்துள்ளார் மோகன் லால்..

எழில்

சிபிஎஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் என்கிற இசை நிகழ்ச்சியில் தன்னுடைய பியானோ திறமையை வெளிப்படுத்தி உலகளவில் கவனம் ஈர்த்தார் சென்னையைச் சேர்ந்த 13 வயது லிடியன் நாதஸ்வரம். அந்நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றில் லிடியன் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார். இதன் மூலம் கிட்டத்தட்ட ரூ. 6 கோடியே 96 லட்சம் பரிசுத்தொகையை வென்றார். 

2 வயது முதல் டிரம்ஸ் வாசிக்கத் தொடங்கிய லிடியன், தற்போது மொசார்ட், பீதோவன் ஆகியோரின் இசைக்குறிப்புகளை பியானோவில்  நன்கு வாசிக்கும் அளவுக்குத் தேர்ச்சி பெற்றுள்ளார். அவரால் தற்போது 14 இசைக்கருவிகளை வாசிக்கமுடியும். பல  நாடுகளில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். இந்தச் சிறுவயதில் பல சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளார். நேரடியாகப் பள்ளிக்குச் செல்லாமல் 1-ம் வகுப்பு முதல் நேஷனல் இன்ஸ்டியூட் ஆஃப் ஓபன் ஸ்கூலிங் வழியாகக் கல்வி கற்று வருகிறார். இவருடைய அக்கா அமிர்த் வர்ஷினியும் இசைக்கலைஞர். அவரும் பள்ளிக்குச் செல்லாமல் ஓபன் ஸ்கூலிங் வழியாகத் தற்போது +2 தேர்வை எழுதவுள்ளார். லிடியனின் தந்தை வர்ஷன் சதீஷ் இசையமைப்பாளராக உள்ளார். 

இந்நிலையில் தற்போது மலையாளத் திரைப்படம் ஒன்றுக்கு இசையமைக்கவுள்ளார் லிடியன். அதுதவிர ஹிந்திப் படமொன்றில் நடிக்கவும் ஒப்புக்கொண்டுள்ளார்.

Barroz என்கிற 3டி படத்தை இயக்கும் முனைப்பில் உள்ளார் பிரபல மலையாள நடிகர் மோகன் லால். ஓர் இயக்குநராக அறிமுகமாகும் படம் இது. இந்தப் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் லிடியன். குழந்தைகளுக்கான படமென்பதால் லிடியனைத் தேர்வு செய்துள்ளார் மோகன் லால். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் முதல் ஆரம்பமாகவுள்ளது. 

இதுதவிர ஹிந்திப் படமொன்றில் இசைக்கலைஞர் வேடத்தில் நடிக்கிறார். நடிக்க ஆசைப்பட்டது ஏன்? அதற்கு லிடியன் சொல்லும் காரணம் - இப்படியாவது ஹிந்தி கற்றுக்கொள்ளலாமே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போவோமா ஊர்கோலம்... அஹானா கிருஷ்ணா!

மரகதப் பறவை... பிரணிதா சுபாஷ்!

உனக்காக என் மனைவியைக் கொன்றேன்! பல பெண்களுக்கு அனுப்பிய பெங்களூரு டாக்டர்!!

TVK Vijay full speech - முதல்வருக்கு சில கேள்விகள்! | TVK | Vijay

இதையெல்லாம் நம்பாதீங்க... ராஜாசாப் படக்குழு அறிக்கை!

SCROLL FOR NEXT