செய்திகள்

தந்தை மகனுக்காக குரல் கொடுக்கும் பாலிவுட்டின் பிரபல தந்தை மகன்!

சினேகா

சூப்பர் ஸ்டார் ஷாரூக்கானும் அவரது மகன் ஆரியனும் தி லயன் கிங் படத்தின் இந்தி டப்பிங்கில் கிங் முபாசா மற்றும் அவரது மகன் சிம்பாவாக பின்னணி குரல் கொடுக்கிறார்கள். இது குறித்து ஷாருக்கான் கூறுகையில், 'எங்கள் ஒட்டுமொத்த குடும்பமும் மிகவும் ரசிக்கும் படம் தி லயன் கிங், எங்கள் அனைவரின் மனம் கவர்ந்த மிகவும் மிகச் சிறந்த படம் இது. 

ஒரு தந்தையாக, முஃபாசா தன் மகன் சிம்பாவுடனும் பகிர்ந்து கொள்ளும் அன்பான உறவையும் என்னால் முழுமையாக உணர்ந்து கொள்ள முடிகிறது. லயன் கிங்கின் மரபு என்பது காலமற்றது, மேலும் எனது மகன் ஆரியனுடன் மிகச் சிற்ப்பு வாய்ந்த இப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு கூடுதல் மகிழ்ச்சியளிக்கிறது. இளைய மகன் ஆப்ராம் இதைப் பார்க்கப் போகிறார் என்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்’ என்றார் ஷாரூக் கான்.

டிஸ்னி இந்தியாவின் ஸ்டுடியோ என்டர்டெயின்மென்ட் தலைவர் பிக்ரம் துக்கல் கூறுகையில், 'லயன் கிங்கின் கிளாசிக் பதிப்பைக் கொண்டு வருவதன் நோக்கம் பரந்த பார்வையாளர்களை சென்றடைவற்காகத்தான்' என்றார்.

மேலும் அவர் கூறுகையில், 'முபாசா மற்றும் சிம்பாவின் கதாபாத்திரங்களை இந்தியில் உயிர்ப்பிக்க ஷாருக்கானையும் அவரது மகன் ஆரியனையும் விட சிறந்த தேர்வை கற்பனை செய்து பார்க்க முடியாது' என்றார்.

அயர்ன் மேன் மற்றும் தி ஜங்கிள் புக் ஆகிய படங்களை இயக்கிய ஜான் பாவ்ரூ இப்படத்தை இயக்குகிறார். டிஸ்னியின் தி லயன் கிங்கின் ஜூலை 19-ம் தேதி ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உலகமெங்கும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

லயன் கிங் ரசிகர்கள் இத்திரைப்படத்துக்காக காத்திருக்கிறார்கள். படத்தின் ட்ரெய்லர் வெளியான தினத்திலிருந்து இன்றுவரை பல லட்சம் பார்வையாளர்களைப் பெற்று வைரலாகிவருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பணிப் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும்!

12 நாள்களுக்குப் பிறகு மீன்பிடிக்கச் சென்ற ராமேசுவரம் மீனவா்கள்!

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்கம் சாா்பில் தென்மண்டல ஆயத்த மாநாடு!

சீனா: பாலம் இடிந்து 12 போ் உயிரிழப்பு

சங்கரன்கோவில் வாா்டுகளில் நகா்மன்றத் தலைவா் ஆய்வு

SCROLL FOR NEXT