முகப்பு
செய்திகள்

தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ள நாகர்ஜுனா: மலைக்க வைக்கும் சம்பளம்!

தெலுங்கு பிக் பாஸ் 3 விரைவில் தொடங்கவுள்ளது. இதற்கான விளம்பரங்கள் வெளிவர ஆரம்பித்துவிட்டன... 

செய்திகள்

தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ள நாகர்ஜுனா: மலைக்க வைக்கும் சம்பளம்!

தெலுங்கு பிக் பாஸ் 3 விரைவில் தொடங்கவுள்ளது. இதற்கான விளம்பரங்கள் வெளிவர ஆரம்பித்துவிட்டன... 

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:20 AM
பகிர்:

தெலுங்கு பிக் பாஸ் 3 விரைவில் தொடங்கவுள்ளது. இதற்கான விளம்பரங்கள் வெளிவர ஆரம்பித்துவிட்டன. 

இந்தமுறை, தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை நாகர்ஜுனா தொகுத்து வழங்குகிறார். அவருடைய அன்னபூர்னா ஸ்டூடியோஸின் அருகில் உள்ள பகுதியின் தான் பிக் பாஸ் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. 

கெளன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியின் தெலுங்கு வடிவத்தை இரு சீஸன்களாக நாகர்ஜுனா தொகுத்து வழங்கினார். அப்போது அவர் ஒருமுறை நிகழ்ச்சியில் தோன்றுவதற்கு ரூ. 7 லட்சம் வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் இந்த வருட தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் தோன்றும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ. 12 லட்சம் வழங்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிக் பாஸ் நிகழ்ச்சி, 105 நாள்கள் நடைபெறவுள்ளது. 

பிக் பாஸ் தொகுப்பாளர்களில் அதிகச் சம்பளம் பெறுபவர், சல்மான் கான். ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் சல்மான் கானுக்கு ஒவ்வொரு வார இறுதி நிகழ்ச்சிகளுக்கும் ரூ. 31 கோடி சம்பளம் பெறுவதாகக் கூறப்படுகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →