முகப்பு
செய்திகள்

விஜய் சேதுபதி படத்துக்கு ஈடு கொடுக்குமா சிறிய படங்கள்?: இந்த வாரம் ஐந்து தமிழ்ப் படங்கள் வெளியீடு!

இப்படித் தேதிகளை மாற்றி வெளியிடுவதால் முன்பே திட்டமிட்டு வெளியாகவிருந்த சிறிய படங்கள்

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:21 AM
பகிர்:

இந்த வாரம் ஐந்து தமிழ்ப் படங்கள் வெளியாகவுள்ளன. 

ஜூன் 27 அன்று விஜய் சேதுபதி நடித்துள்ள சிந்துபாத் படம் வெளிவருகிறது. ஜூன் 28 அன்று ஹவுஸ் ஓனர், தர்ம பிரபு, ஜிவி, நட்சத்திர ஜன்னலில் என நான்கு படங்கள் வெளிவருகின்றன. 

சிந்துபாத் படம் கடந்த வாரம் வெளிவருவதாக இருந்தது. ஆனால் நீதிமன்றம் விதித்த தடையினால் வெளியாகவில்லை. இந்த வாரம் எல்லாத் தடைகளையும் தாண்டி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் திடீரென சிந்துபாத் படம் இந்த வாரம் வெளியாவதற்கு ஹவுஸ் ஓனர் படத்தின் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இப்படித் தேதிகளை மாற்றி வெளியிடுவதால் முன்பே திட்டமிட்டு வெளியாகவிருந்த சிறிய படங்கள் பாதிப்புக்கு ஆளாகின்றன என்று தன் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.