செய்திகள்

34 வயது நடிகருடனான காதலை வெளிப்படுத்திய 45 வயது பாலிவுட் நடிகை!

சமீபத்தில் அர்ஜூன் கபூரும் மலைகாவும் காதலித்து வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன...

எழில்

பிரபல தயாரிப்பாளரும் மறைந்த ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூரின் மகன் அர்ஜூன் கபூர் (போனி கபூரின் முதல் மனைவியின் மகன்). 34 வயதான இவர், 2 ஸ்டேட்ஸ், கி & கா படங்களில் நடித்துக் கவனம் பெற்றவர். 

மணி ரத்னம் இயக்கிய உயிரே படத்தில் தைய்யா தைய்யா பாடலுக்கு ஷாருக் கானுடன் இணைந்து நடனமாடியவர், மலைகா அரோரா. 45 வயதான இவர், பல படங்களில் நடித்துள்ளார். சில படங்களைத் தயாரித்துள்ளார். 1998-ல் நடிகரும் இயக்குநருமான அர்பாஸ் கானைத் திருமணம் செய்தார். 2017-ல் இருவரும் பிரிந்தார்கள். இவர்களுக்கு ஒரு மகன் உண்டு. அவர் மலைகாவிடம் வாழ்ந்து வருகிறார். 

இந்நிலையில் சமீபத்தில் அர்ஜூன் கபூரும் மலைகாவும் காதலித்து வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக இன்ஸ்டகிராம் பதிவொன்றை வெளியிட்டுள்ளார் மலைகா.

அதில், அர்ஜூன் கபூருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு, என்னுடைய வேடிக்கையான, அற்புதமான அர்ஜூன் கபூருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். காதலும் மகிழ்ச்சியும் எப்போதும் என்று வாழ்த்தியுள்ளார். இதையடுத்து இருவரின் காதல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT