செய்திகள்

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கியுள்ள காஞ்சனா 3: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

காஞ்சனா 3 படத்தின் வெளியீடு தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்பட்டது...

எழில்

ராகவா லாரன்ஸ் இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள படம் - காஞ்சனா 3. இதில் ராகவா லாரன்ஸ், ஓவியா, வேதிகா, கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் போன்றோர் நடித்துள்ளார்கள்.

ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ராகவா லாரன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிடுகிறது. 

ஏப்ரல் 18-ம் தேதி காஞ்சனா 3 படம் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் பதினேழாவது மக்களவைக்aகு ஏப்ரல் 11 முதல் மே 19-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 18-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 

இதனால் காஞ்சனா 3 படத்தின் வெளியீடு தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் காஞ்சனா 3 படம் ஏப்ரல் 19 அன்று வெளியாகும் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோல்டன்... திவ்ய பாரதி!

பஞ்சாப் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு அழுத சிறுவன்.. ராகுல் காந்தி அளித்த பரிசு!

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

வரப்பெற்றோம் (15.09.2025)

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 28 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT