செய்திகள்

கொல்லபுடி ஸ்ரீனிவாஸ் தேசிய விருது: 96 பட இயக்குநர் பிரேம் குமார் தேர்வு!

எழில்

ஒவ்வொரு ஆண்டும் சிறந்த புதுமுக இயக்குநரைத் தேர்வு செய்யும் கொல்லபுடி ஸ்ரீனிவாஸ் தேசிய விருது, 96 பட இயக்குநர் சி. பிரேம் குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு நடிகர் கொல்லபுடி மாருதி ராவின் மகன்,  கொல்லபுடி ஸ்ரீனிவாஸ் 1992-ல், தனது முதல் படத்தை இயக்கியபோது ஒரு விபத்தினால் மரணமடைந்தார். இதையடுத்து, 1998 முதல், மறைந்த கொல்லபுடி ஸ்ரீனிவாஸ் நினைவாக அறிமுக இயக்குநருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

2002-ல் குட்டி படத்தை இயக்கிய ஜானகி விஸ்வநாதனுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. அதன்பிறகு கொல்லபுடி ஸ்ரீனிவாஸ் விருதைப் பெரும் தமிழ் இயக்குநர் என்கிற பெருமையை பிரேம் குமார் பெறவுள்ளார். இந்த ஆண்டு ஆகஸ்ட் 12 அன்று நடைபெறவுள்ள விழாவில் பிரேம் குமாருக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது.

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் சி. பிரேம் குமார் இயக்கியுள்ள படம் - 96. சமீபத்தின் வெளியான இந்தப் படம் மக்களின் அதிக வரவேற்பைப் பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT