செய்திகள்

காவல்துறை அதிகாரிகளின் வாரிசுகளினால் தொந்தரவு: எம்.எஸ்.தோனி போலீசில் புகார்  

காவல்துறை அதிகாரிகளின் வாரிசுகள் என்னைத் தொந்தரவு செய்கிறார்கள் என்று எம்.எஸ்.தோனி புகார் செய்துள்ளார்.

DIN

சென்னை: காவல்துறை அதிகாரிகளின் வாரிசுகள் என்னைத் தொந்தரவு செய்கிறார்கள் என்று எம்.எஸ்.தோனி புகார் செய்துள்ளார்.

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளின் 12-ஆவது சீசன் சென்னையில் சனிக்கிழமையன்று துவங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சரஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் காவல்துறை அதிகாரிகளின் வாரிசுகள் என்னைத் தொந்தரவு செய்கிறார்கள் என்று எம்.எஸ்.தோனி புகார் செய்துள்ளார்.

எம்.எஸ்.தோனி சார்பில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மேலாளர் சென்னை தெற்கு காவல்துறை இணை ஆணையரிடம் இந்தப் புகாரினை அளித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டிகளுக்காக அணி வீரர்கள் தற்போது அடையாறில் உள்ள கிரவுன் பிளாசா நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளார்கள்.

இந்த ஹோட்டலுக்கு அடிக்கடி வரும் காவல்துறை உயர் அதிகாரிகளின் வாரிசுகள் சிலர்

எம்.எஸ்.தோனியுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பல்வேறு சமயங்களில்  தொந்தரவு செய்கின்றனர். 

இவ்வாறு அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.எஸ்.தோனியின் இந்தப் புகாரானது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்: குற்றவாளிகளைப் பிடித்தது எப்படி? காவல் ஆணையர் பேட்டி! | CBE

SCROLL FOR NEXT