முகப்பு
செய்திகள்

மூச்சுத்திணறல்: பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் மருத்துவமனையில் அனுமதி 

மூச்சுத்திணறல் ஏற்பட்டதன் காரணமாக பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Updated On : 27 மார்ச் 2019, 6:43 pm IST
பகிர்:

சென்னை: மூச்சுத்திணறல் ஏற்பட்டதன் காரணமாக பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் திரையுலகின் மூத்த இயக்குநர்களில் ஒருவர் மகேந்திரன். 1966-ஆம் ஆண்டு முதல் தமிழ் திரை உலகில் கதை வசனகர்த்தாவாக பணியாற்றத் துவங்கிய இவர், சிவாஜி நடித்த 'தங்கப்பதக்கம்' படம் உள்ளிட்ட பல படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார்.

பின்னர் 1974-ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் 'முள்ளும் மலரும்' திரைப்படம் மூலம் இயக்குநராகவும் ஆனார்.  பின்னர் உதிரிப்பூக்கள், ஜானி, நெஞ்சத்தைக் கிள்ளாதே உள்ளிட்ட பல படங்களை இயக்கினார்.

Advertisement

Advertisement

பின்னர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு 2004-ஆம் ஆண்டு 'காமராஜ்' திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். பின்னர் விஜய் நடித்த தெறி, உதயநிதியின் 'நிமிர்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.   

இந்நிலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டதன் காரணமாக இயக்குநர் மகேந்திரன் புதன் மாலை  சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது மருத்துவனையில் அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.