முகப்பு
செய்திகள்

அஜித் சொன்ன ஒரு வார்த்தை காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது: உருகிய இசையமைப்பாளர் 

அஜித் கூறிய ஒரே ஒரு ஒரு வார்த்தை என் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது என்று பிரபல இசையமைப்பாளர் நெகிழ்ந்து கூறியுள்ளார்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:31 AM
பகிர்:

சென்னை: அஜித் கூறிய ஒரே ஒரு ஒரு வார்த்தை என் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது என்று பிரபல இசையமைப்பாளர் நெகிழ்ந்து கூறியுள்ளார்.

கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியான 'வாகை சூட வா' திரைப்படம் மூலமாக தமிழ்திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிப்ரான். பின்னர் உத்தம வில்லன், விஸ்வரூபம், தூங்காவனம், 'மாயவன்', 'ராட்சசன்' உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து, தற்போது தமிழின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.

இந்நிலையில் அஜித் கூறிய ஒரே ஒரு ஒரு வார்த்தை என் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது என்று பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் நெகிழ்ந்து கூறியுள்ளார்.

'சதுரங்க வேட்டை' படத்தை இயக்கிய ஹெச்.வினோத் தற்போது அஜித் நடித்து வரும் 'நேர்கொண்ட பார்வை' படத்தை இயக்கி வருகிறார்.  இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இடைவேளையில் அஜித்தை இசையமைப்பாளர் ஜிப்ரான் சந்தித்து பேசியுள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து ஜிப்ரான் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

ஒரு உண்மையான அஜீத் ரசிகனின் பிரமிப்பான மனநிலையில் அஜித் சாருடன் இருக்கிறேன். மற்றவர்கள் எல்லோரும் சொல்வதை போலவும், அதைக் காட்டிலும் மேலானவராகவும் அஜித் சார்  இருக்கிறார். அவர் பேசிய வார்த்தைகளில் ‘'நம்ம சேர்ந்து ஒர்க் பண்ணுவோம்'' என்னும் ஒரே ஒரு வார்த்தை என் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. நன்றிகள்

இவ்வாறு ஜிப்ரான் பதிவிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →