சரண் இயக்கத்தில் ஆரவ் நடிக்கும் மார்க்கெட் ராஜா!
கடந்த 9 வருடங்களில் இரு படங்கள் மட்டுமே இயக்கியுள்ளார் சரண். 2010-ல் அசல் வெளிவந்தது..
கடந்த 9 வருடங்களில் இரு படங்கள் மட்டுமே இயக்கியுள்ளார் சரண். 2010-ல் அசல் வெளிவந்தது. 2017-ல் ஆயிரத்தில் இருவர். இப்போது இரு வருட இடைவெளிக்குப் பிறகு புதிய படமொன்றை இயக்கி வருகிறார் சரண்.
பிக் பாஸ் புகழ் ஆரவ், ராதிகா நடிப்பில் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் என்கிற சரண் இயக்கும் படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. வட சென்னை டான் ஆக ராதிகா இந்தப் படத்தில் நடிக்கிறார்.
மார்க்கெட் ராஜா, ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.