செய்திகள்

எனது குடியுரிமை விவகாரத்தைச் சர்ச்சையாக்குவதா?: நடிகர் அக்‌ஷய் குமார் வருத்தம்!

எழில்

மக்களவைத் தேர்தலில் நடிகர் அக்‌ஷய் குமார் வாக்களிக்காததால் அவருடைய நாட்டுப்பற்று குறித்துப் பலரும் கேள்வியெழுப்பினார்கள். வாக்குரிமை குறித்து அவர் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டதால் அதை வைத்தும் சமூகவலைத்தளங்களில் பலரும் கிண்டல் செய்தார்கள். மேலும் அவருடைய குடியுரிமை குறித்தும் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதற்குப் பதில் அளித்து ட்விட்டரில் அக்‌ஷய் குமார் கூறியதாவது:

என்னுடைய குடியுரிமை குறித்து எதிர்மறை உணர்வுகள் உருவாகியுள்ளது எனக்குப் புரியவில்லை. நான் கனடா நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருப்பதை ஒருபோதும் மறைத்ததில்லை. நான் கடந்த 7 வருடங்களாக கனடா சென்றதில்லை என்பதும் உண்மையே. நான் இந்தியாவில் பணிபுரிகிறேன். என் எல்லா வரிகளையும் இங்குதான் செலுத்துகிறேன். இந்தியா மீதான எனது பற்றை மற்றவர்களுக்கு நிரூபித்துக்காட்ட வேண்டும் என்று இத்தனை வருடங்களாக நான் எண்ணியதில்லை. என்னுடைய குடியுரிமை பிரச்னை தேவையில்லாமல் சர்ச்சையாக்கப்படுகிறது. இது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. அந்த விவகாரம் தனிப்பட்ட முறையிலானது, சட்டரீதியானது, அரசியல் அற்றது, அடுத்தவருக்கு எந்த விளைவையும் ஏற்படுத்தாத ஒன்று. இந்தியா வலிமையான நாடாக வளர என்னாலான பங்களிப்பைத் தொடர்ந்து செய்வேன் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

SCROLL FOR NEXT