செய்திகள்

மேக் அப் இல்லாமல் சாய் பல்லவி நடிக்கவிருக்கும் விராட பர்வம் 1992!

சாய் பல்லவியின் வெற்றிக்கு காரணம் அவரது அழகல்ல, திறமையே! அதீத மேக் அப்போ, அனாவசியமான அங்க சேஷ்டைகளோ, கவர்ச்சியோ எதுவுமின்றி கதை கோரும் விஷயங்களை மட்டுமே வெளிப்படுத்தத் தெரிந்த வித்தை தான்

சரோஜினி

சாய்பல்லவி அறிமுகமானது மலையாளத்தில் என்றாலும் அவர் டாப் ஸ்டார் ஆனது தெலுங்கில். ஃபிடா, மிடில் கிளாஸ் அப்பாயி (MCA), படி படி லேசே மனசு போன்ற வெற்றித்திரைப்படங்களில் நடித்து மனவாடுகளின் மனதை ஏகத்துக்கும் கொள்ளையடித்து வைத்திருக்கிறார் சாய் பல்லவி.

சாய் பல்லவியின் வெற்றிக்கு காரணம் அவரது அழகல்ல, திறமையே! அதீத மேக் அப்போ, அனாவசியமான அங்க சேஷ்டைகளோ, கவர்ச்சியோ எதுவுமின்றி கதை கோரும் விஷயங்களை மட்டுமே வெளிப்படுத்தத் தெரிந்த வித்தை தான் சாய் பல்லவியின் வெற்றிக்கு 100% காரணம். இதோ இப்போது கூடப் பாருங்கள், அடுத்து ராணா டகுபதியுடன் சாய் பல்லவி நடிக்கவிருக்கும் ‘விராட பர்வம் 1992’ ல் சாய் பல்லவிக்கு சுத்தமாக மேக் அப்பே கிடையாது என்கிறார்கள். இப்படியொரு வேடத்தை ஒப்புக் கொள்ள வேறு எந்த நடிகையும் தயங்கக் கூடிய நேரத்தில் சாய் பல்லவி மட்டும் அதற்கு டக்கென ஒக்கே சொல்லி விட்டாராம். மேக் அப் இல்லாமல் நடிக்கும் தைரியம் எப்படி வந்தது? எல்லாம் தன் நடிப்புத் திறன் மீது கொண்டுள்ள நம்பிக்கையால் தான் என்கிறார்கள்.

படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் முழுதாக வெளியிடப்படவில்லை. எனினும் கூடிய விரைவில் தகவல்கள் வரலாம். டோலிவுட்டில் தற்போது இளைய நடிகர்கள் அனைவரும் ஒருமுறையேனும் இணைந்து நடித்து விடத் துடிக்கும் இளம் நடிகைகளில் சாய் பல்லவி முதன்மையானவர் என்று சொல்லப்படுகிறது.

தற்போது தெலுங்கு தவிர தமிழ் மற்றும் மலையாளத்திலும் கூட  அடுத்தடுத்த தொடர்ந்து நடித்து வருகிறார் சாய் பல்லவி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

SCROLL FOR NEXT