செய்திகள்

விஜய் சேதுபதி மற்றும் தனுஷ் படங்களை வெளியிட நீதிமன்றம் தடை 

DIN

சென்னை: நடிகர்கள் விஜய் சேதுபதியின் 'சிந்துபாத்' மற்றும் தனுஷின் 'எனை நோக்கிப் பாயும் தோட்டா' ஆகிய திரைப்படங்களை வெளியிட ஹைதராபாத் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

நடிகர்கள் விஜய் சேதுபதியின் 'சிந்துபாத்' மற்றும் தனுஷின் 'எனை நோக்கிப் பாயும் தோட்டா' ஆகிய திரைப்படங்களை தமிழில் வெளியிட கே புரொடக்ஷன்ஸ் என்னும் நிறுவனம் உரிமம் பெற்றுள்ளது.

இந்த நிறுவனமானது 'பாகுபலி' வரிசை திரைப்படங்களை தமிழில் வெளியிட்ட நிறுவனமாகும். அப்படி வெளியிட்ட வகையில் பாகுபலி  தயாரிப்பு நிறுவனத்திற்கு ரூ. 17.60 கோடி பாக்கி வைத்துள்ளது.

இதையடுத்து பாகுபலி திரைப்பட தயாரிப்பு நிறுவனமானது ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில், கே புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கில் தங்களுக்கு வரவேண்டிய பணத்தை திருப்பித் தராமல், கே புரொடக்ஷன்ஸ் எந்த படங்களையும் வெளியிட தடை கோரியது.

அதன்படி பாகுபலி படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று விஜய் சேதுபதியின் சிந்துபாத்’, தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படங்களை வெளியிட ஐதராபாத் உயர் நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்தது

அத்துடன் எந்த வகையிலும் இந்த இரு படங்களையும் வெளியிடவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

SCROLL FOR NEXT