டி.ஆர்.பி-யில் நெ.1: அஜித்தின் விஸ்வாசம் படம் சாதனை!
கடந்த வாரம் இந்திய அளவிலான டிஆர்பி தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது விஸ்வாசம் பட ஒளிபரப்பு...
அஜித் - இயக்குநர் சிவா ஆகிய இருவரும் மீண்டும் இணைந்த படம் - விஸ்வாசம். கதாநாயகியாக நயன்தாரா நடித்தார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்த இப்படத்தில் ஜகபதி பாபு, விவேக், யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, கோவை சரளா போன்றோரும் நடித்தார்கள். இசை - இமான், ஒளிப்பதிவு - வெற்றி. இந்தப் படம் ஜனவரி 10-ம் தேதி வெளியானது. தமிழ்நாட்டில் ரூ. 130 கோடி வரை இப்படம் வசூலித்துள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் ஒரு பேட்டியில் கூறினார்.
விஸ்வாசம் படம் கடந்த மே 1-ம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பானது. இது தற்போது ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது.
கடந்த வாரம் இந்திய அளவிலான டிஆர்பி தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது விஸ்வாசம் பட ஒளிபரப்பு. இத்தகவலை சத்யஜோதி நிறுவனம் வெளியிட்டுள்ளது.